Home
You Are Here: Home » News » அரக்கோணம் ரயில் நிலையத்தில் பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்கள் பீதி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்கள் பீதி

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட பார்சலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

ஜோத்பூரிலிருந்து காட்பாடி வரை செல்லும் காசீகுடா ரயிலில் ஏற்றப்பட்ட பார்சல்களில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது . இதனால் பார்சல்கள் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி வைக்கப்பட்டது.

அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் பார்சல்களை சோதனை செய்தனர்.

சுமார் 1 மணி நேர சோதனைக்கு பின்னர் பார்சலில் வெடிகுண்டு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர். இச்சம்பவம் அக்கோணம் ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top