Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பாஸ்கர் வலியுறுத்தினார்.

தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பாஸ்கர் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது தர்மபுரி மாவட்டம் பல்லாம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள தடங்கம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தருமபுரி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் புகார் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன், ஆய்வு செய்யப்பட்ட பகுதியில் விரைவில் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஆரணி நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், நகரத்தி்றகு வெளியே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என்று கேள்வி ஆரணி தேமுதிக உறுப்பினர் பாபுமுருகவேல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் முனுசாமி, கருத்துரு ஆராயப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார்.

சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியம் தேவனூர் நாடு ஊராட்சி மேட்டு விளாதம் கிராமத்தில், புதிய நியாய விலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று சேந்தமங்கலம் தேமுதிக உறுப்பினர் சாந்தி ராஜமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ, அரசு நிபந்தனைகளின்படி 100 குடும்ப அட்டைகளுக்கு மேல் மட்டுமே இருந்தால் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்றும் விளாதம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்க சாதியக்கூறுகள் இல்லை என்றும் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி ஒன்றியத்தில் மாநகர போக்குவரத்து பணிமனை அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று கும்மிடிபூண்டி தேமுதிக உறுப்பினர் சிஎச் சேகர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி, திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கிளை சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கும்மிடிபூண்டியில் மாநகர போக்குவரத்து கழகம் அமைக்கும் அளவிற்கு பேருந்துகள் அதிகம் இயக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர், எனவே கும்மிடிபூண்டியில் மாநகர போக்குவரத்து கழக பணிமனை அமைக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

விருதுநகரில் 800 பட்டாச தொழிற்சாலை உள்ளதாகவும், கடந்த முறை விபத்து ஏற்பட்ட போது, அங்கு ஆய்வு செய்த அமைச்சர் தரக்கட்டுப்பாடு மையம் கொண்டு வரப்படும் என்று கூறினார். அந்த தரக்கட்டுப்பாடு அமைவதற்கு ஐஎஸ்ஓ மானியம் வழங்கப்படுமா என்று விருதுநகர் தொகுதி தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், இந்த கேள்வி துணைக்கேள்விக்கு பொருந்தியது அல்ல என்று கூறி, பொறுப்பை தட்டிக்களித்தார்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top