Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » என்.எல்.சி. முன்பு கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்

என்.எல்.சி. முன்பு கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டம்

நெய்வேலி மற்றும் கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.எல்.சி. முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.

அக்கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். நதிநீர் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், காவரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசுக்கு மின்சாரம் வழங்க கூடாது என்று போராட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்‌பொழுது மின்வெட்டு அதிகமாக நிலவுவதால், நெய்வேலி மற்றும் கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இப்போராட்டம் நடைபெறுகிறது. முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான காவல துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top