Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.


சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களில் பாஸ்கா திரி ஏந்தி நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் மந்திரித்தல்‌, ஞானஸ்தான வார்த்தைபாடு புதுப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.இரவு 12 மணியளவில் அனைத்து ஆலயங்களிலும் ஒரே நேரத்தில் ஆலய மணி ஒலிக்க ஏசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வை குறிக்கும் வகையில் உன்னத பாடல்கள் ஒலிக்கப்பட்டு பின்னர் திருப்பலி நடைபெற்றது.

கடலூர் புது‌நகர் புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பெருவிழா நள்ளிரவு 12.30 மணிக்கு கூட்டு திருப்பலியுடன் தொடங்கியது‌. பங்குதந்தை அன்போன்ஸ் சந்திராமை தலைமையில் நடந்த இந்த திருப்பலியில் பக்தர்கள் மீது‌ புது‌ நெருப்பு, புது‌ தண்ணீர் தெளிக்கப்பட்டது‌. இந்த சிறப்பு ஆதாரனையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது‌மக்கள் கலந்து‌ கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் இயேசுவின் உயிர்ப்பு விழாவான ஈஸ்டர் விழா நள்ளிரவு திருபலியுடன் கொண்டாடப்பட்டது. கிறித்தவர்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்‍.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top