Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

தர்மபுரி கலவரம் தொடர்பாக பெண்களை தரக்குறைவாய் பேசியதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றத்துக்காக பெண்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகளும் கலந்து கொண்டன. தர்மபுரி காதல் விவகாரம் தொடர்பாக ராமதாஸ் பேசும்போது வண்ண உடைகளில் உலவும் ஆண்களை பார்த்தவுடன் பெண்கள் காதல் வலையில் விழுந்து விடுகின்றனர் என பெண்களின் கட்டுப்பாடு குறித்து இழிவாக பேசியதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்காக ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஷீலு வலியுறுத்தினார்.

1989ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை ராமதாஸ் திருத்தம் செய்யச் சொல்வதை தாங்கள் முற்றிலும் எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். அடுத்து வரும் தேர்தல்களில் பெண்கள் ராமதாஸுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என அவர் கூறினார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top