Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ariyalur » தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர்.

மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின் ஆணவ போக்கை கண்டித்து சென்னையில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் தலைமையில் தேமுதிகவினர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக அரசின் அராஜக போக்கை கண்டித்து நாகை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை தெற்கு மாவட்ட செயலாளர் அணிஸ் பாண்டியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் நகர கழக செயலாளர் பண்ணை பாலு தலைமையில் சாலையில் மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் சீர்காழி கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் அராஜக போக்கை கண்டித்து திடீர் சாலை மறியல் மற்றும் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பூம்புகாரில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 100க்கும்

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டதை கண்டித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் சிவக்குமார் தலைமையில் தேமுதிகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்ப்பட்டது.

அதேபோல் கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூரில் மாவட்ட செயலாளர் மகா.முத்துகு்மார் தலைமையில்சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கிருஷ்ணகோபால் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top