Home
You Are Here: Home » News » திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது

திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.

திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் நேற்று இரவு முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மின்கசிவு காரணமாக தீப் பிடித்துக்கொண்டது. இதில் தீ மள மளவென பரவி அருகில் இருந்த மேலும் 3 வீடுகளுக்கும் தாவியது. இதில் 4 வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த வீடுகளில் இருந்த 24 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் 6 லட்சம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top