Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கழக செயலாளரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான எல் வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தேமுதிக மகளிரணியினர் கலந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்ட தேமுதிக மகளிரணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிரணி செயலாளர் வசந்தா உள்ளிட்ட ஏராளானமானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்மொழி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு தேமுதிக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் உள்பட மகளிர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தெய்வாகுருசாமி தலைமை தாங்கினார். இதில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் பிவிபி முத்துக்குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சபா.சசிகுமார் உள்பட ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

தேனியில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சைனாஸ்பேகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தேர்தல் பணி செயலாளர் வீரப்பன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கழக செயலாளர் பாண்டியன் கலந்து கொண்டார். இதில் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் செளந்திரபாண்டியன் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்திமுருகேஷன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் கலந்து கொண்டார். இதில் மாநில கேப்டன்மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாற்று திறனாளி அணி மாநில துணை செயலாளர் செல்வராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே பாலசுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி சார்பில், தாராபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கீர்த்தி சுப்பிரமணியம், விசி சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மத்திய மாநில அரசுகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

About The Author

Number of Entries : 5564

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top