Home
You Are Here: Home » News » அ.தி.மு.க எம்.எல்.‌ஏ பரஞ்ஜோதி மீது டாக்டர் ராணி தொடர்ந்துள்ள இரண்டு புதிய‌ புகார் மனுக்கள் மீதான விசாரணை‌ வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க எம்.எல்.‌ஏ பரஞ்ஜோதி மீது டாக்டர் ராணி தொடர்ந்துள்ள இரண்டு புதிய‌ புகார் மனுக்கள் மீதான விசாரணை‌ வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ பரஞ்ஜோதி மீது ‌டாக்டர்‌ ராணி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு புகார் மனு அளித்தார். அதில், பரஞ்ஜோதியின் தூண்டுதலின் பேரில், கோட்டை‌ குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் கோவிந்தராஜன், சீனிவாசன் நகரில் அழகுநிலையம் நடத்தி வரும் அன்னகாமு ஆகியோர் தமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து செல்போனில் படம் எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி திருச்சி அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்ம‌னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ‌தனையடுத்து எம்.எல்.ஏ பரஞ்ஜோதி மீதான புகாரில் உரியமுறையில், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் ராணி தமது மனுவில் தெரிவித்துள்ளார். இம்மனு தொடர்பான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலுமயில் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு குறித்து வரும் 11 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top