Home
You Are Here: Home » News » India » இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது – யஷ்வந்த் சின்ஹா

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது – யஷ்வந்த் சின்ஹா


இலங்கையில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்ற‌ம்சாட்டியுள்ளார்

இலங்கையில்‌ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மக்களவையில் ‌நடைபெற்ற விவாதத்தில் இதனை தெரிவித்தார்.இலங்கை போர்‌க்குற்றம் தொடர்பான சேனல் 4 தொலைக்காட்சி ‌ஒளிபரப்பி்ய காட்சிகள் கண் கலங்க வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளு‌க்கு எதிரான போர் முடிவு பெற்றும் அங்கு தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய யஷ்வந்த் சின்ஹா , பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொடூரமாக கொலை செய்து இருப்பது இதற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு‌ள்ளார்

கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்த யஷ்வந்த் சின்ஹா, மக்களவையில் நடைபெறும்‌ விவாதம் இல‌ங்கை மீதான இந்திய நிலைப்பாட்டை மாற்ற உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்‌துள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Comments (5)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top