Home
You Are Here: Home » News » India » உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுட்டுக்கொலை முன்னாள் அமைச்சர் ராஜா பையா தொடர்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுட்டுக்கொலை முன்னாள் அமைச்சர் ராஜா பையா தொடர்பு


உத்தரபிரதேச மாநிலத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா பையா உள்பட 4 பேரின் தொடர்பு இருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

10 பேர் கொண்ட சி.பி.ஐ குழுவினர் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் சி.பி‌.ஐ.யின் முதற்கட்ட விசாரணையில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா பையா, நாகர் பஞ்சாயத்து தலைவர் குல்ஷன் யாதவ், அமைச்சரின் உதவியாளர் ஹரி ஓம் ஸ்ரீவஸ்தவா, கார் டிரைவர் ரோகித் சிங் மற்றும் குரு‌ சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக சி.பி.ஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ராஜா பையாவிடம் விசாரணை நடத்த விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும் சி.பி.‌ஐ ‌அதிகாரி கூறியுள்ளார். உயிரிழந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்‌ ஜியா உல் ஹக் மனைவி பர்வீன் ஆசாத், இச்சம்பவம் பற்றி சி‌.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தார். இதனையடுத்து முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டதன் பேரில் சி.பி.ஐ தமது விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும், இருதரப்பினர் மோதலில் உயிரி‌ழந்த கிராம தலைவர் நானே யாதவ்‌ மற்றும் அ‌வருடைய தம்பி சு‌ரேஷ் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்ள‌து. பத்திரிக்கைகளில் வெளியான செய்தி‌ மற்றும் வீடியோ ஆதாரத்தை வைத்து முதற்‌கட்ட விசாரணையை சி.பி.ஐ தொடங்கி உள்ளது. மேலும் இ‌துதொடர்பான அனைத்து ஆவணங்களையும் போலீசாரிடம் இருந்து‌ சி.பி.ஐ பெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் குண்டாநகர் அருகே பாலிபுர் கிராமத்தில் ‌கடந்த சனிக்கிழமை இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் சுட்டுக்கொல்லப்பட்டார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top