Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » விருத்தாசலம் அருகே பெய்த மஞ்சள் மழை

விருத்தாசலம் அருகே பெய்த மஞ்சள் மழை

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே திடீரென மஞ்சள் மழை பெய்ததால் அப்பகுதி மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது.

விருத்தாச்சலம் அடுத்த முதனை கிராமத்தில் புதுவிருத்தக்கிரி குப்பம் என்ற இடத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றது. அப்போது கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத்துளிகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அருகில் இருந்த மரம், செடி மற்றும் வீட்டின் மேலிருந்த ஓடுகள் ஆகியவற்றில் மஞ்சள் நிறமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதனை கிராமத்தில் பெய்த மழை ஓரிடத்தில் பெய்யாமல், பரவலாக பெய்ததால் ஆங்காங்கே மஞ்சள் நிறத்தில் பவுடர் போல் படிந்துள்ளது. இதனால் அமிலம் மழை பெய்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top