Home
You Are Here: Home » News » திருத்துறைப்பூண்டியில் 2 வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்

திருத்துறைப்பூண்டியில் 2 வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை அதிகாரிகள் முறையாக வழங்காததைக் கண்டித்து திருத்துறைப்பூண்டியில் 2 வது நாளாக விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாடு ‌அரசு அறிவித்துள்ள 15 ஆயிரம் நிவாரணத்தொகையை அதிகாரிகள் வழங்காமல் 3 ஆ‌யிரம் ரூபாய் வழங்குவதாக விவசாயி‌கள்‌ குற்றச்சாட்டியுள்ளனர்.‌ விவசாயிகளுக்கு பாரபட்சம் இன்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணநிதி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நிவாரணநிதியையும், பயிர் காப்பீட்டு தொகையையும் தனித்தனியாக வழங்க‌ வேண்டும் என்று கூறிய அவர்கள், கரும்பு, வாழை , நிலக்கடலை உள்ளிட்ட பயிருக்கும் மீன்வளர்ப்பு பாதிப்பிற்கும் நிவாரணநிதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நிவாரணநிதியை முறையாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடப் போவதில்லை என்று விவசாயிகளுக்கு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‌

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top