Home
You Are Here: Home » News » அ.தி.மு.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்கத்தவறிய அ.தி.மு.க அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மெத்தனபோக்கையே கடைபிடித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். முக்கால் பங்கு நிலம் பாதிக்கப்பட்டு மகசூல் இழந்த நிலையில் கால்பங்கு அளவிற்கே நிவாரணம் அரசு வழங்குவது விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு என அவர்கள் வேதனை தெரிவித்தனர். இத்தகைய போக்கை கண்டித்தும்‌, கைவிடக்கோரியும் பாதிக்கப்பட்ட நிலங்களை மறு ஆய்வுக்கு உள்ப்படுத்தி உரிய நிவாரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் திருவாரூர்‌, நன்னிலம்‌, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட அனைத்து ஒன்றியங்களிலும் சாலைமறியல் நடைபெற்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top