Home
You Are Here: Home » News » டெல்டா மாவட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீடு

டெல்டா மாவட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீடு

காவிரியில் தண்ணீர் இல்லாததால், சம்பா பயிரிட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை பொய்த்துப்போன நிலையில் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால விவசாயிகள் தற்கொலை செய்து கெர்ள்ளும் நிலை ஏறப்ட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள சம்பா விவசாயிகளுக்கு ஏககருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கை, தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார். அத்துடன் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top