Home
You Are Here: Home » News » Tamil Nadu » மேல்மருவத்தூர் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு

மேல்மருவத்தூர் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, மேல்மருவத்தூருக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேன், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன், மனைவி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த கிடப்பனூரைச் சேர்ந்தவர்கள், 2 வேன்களில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். முதலில் சென்ற் வேன், வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே வந்தபோது, கட்டுபபாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் மோகன் என்ற பக்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமைடந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறந்து போன மோகனின் மனைவி ஆவார். பலத்த காயமடைந்துள்ள வேன் ஓட்டுனர் மணிகண்டன் ஆபத்தான் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

About The Author

Number of Entries : 5539

Comments (6)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top