Home
You Are Here: Home » News » Tamil Nadu » காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

காவிரி தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்தும் வகையில்,தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

வேலூரில் நடைபெற்ற சிறுபான்மை மக்கள் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்க வந்த கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிடக் கூடாது என்பதற்காக, கர்நாடக அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, பிரதமரை சந்திக்க உள்ளதாகக் கூறிய அவர் அதனை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சச்சார் குழு மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காலம், காலமாக நடந்து வரும் காதல் திருமணங்களை, நாடக்ம் என ராமதாஸ் கூறிவருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ராமகிருஷ்ணன், காதல் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும என தெரிவித்தார்

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top