Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » காவல்நிலையத்தில் இளைஞர் சித்திரவதை செய்ததாக புகார்

காவல்நிலையத்தில் இளைஞர் சித்திரவதை செய்ததாக புகார்

சென்னை அசோக் நகர் காவல்நிலையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரை போலீசார் சித்திரவதை செய்ததாக கூறி பொதுமக்கள் காவல்நிலையம் முற்றுகையிட்டனர்.

அசோக்நகர் ஆர்‌.3 காவல்நிலையத்தில் பிரகாஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, வழக்கை விசாரித்த ஆய்வாளர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறுது. இளைஞரை மிகவும் கொடூரமாக தாக்கியதாகவும் புகார் எழுந்தது. விசாரணையின் போது வாலிபரின் கையை உடைத்து விட்டதாகவும் விலா எலும்பில் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

தலித் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அசோக்நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆய்வாளர் சரவணனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்

About The Author

Number of Entries : 2282

Leave a Comment

© 2013 Captain Media Pvt Ltd

Scroll to top