Home
You Are Here: Home » News » India » “இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி” – வைகோ கடும் கண்டனம்

“இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி” – வைகோ கடும் கண்டனம்

இலங்கை ராணுவத்திற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று கூறிய ராணுவ மந்திரிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில், தமிழ்நாட்டைத் தவிர்த்து வேறு மாநிலங்களில் இலங்கை ராணுவத்திற்குத் தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியிப்பது கண்டனத்திற்கு உரியது என்றார். இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைச் ராஜபக்சே அரசு நடத்தியதில் கூட்டுக் குற்றவாளி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்றும் அவர் குற்றம்சாட்டினார். திட்டமிட்டே இந்தத் துரோகத்தை தமிழர்களுக்கு, இந்திய அரசு செய்துவிட்டதாகவும், தமிழர்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த சிங்கள அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குத் திரும்பத் திரும்ப அழைத்து, சிவப்புக் கம்பள வரவேற்பையும் கொடுத்து வருவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். தமிழர்கள் உணர்வுகளை மத்திய அரசு மதிக்காமல், சிங்கள விமானப்படைக்குத் தாம்பரத்தில் பயிற்சியும், ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி, வெலிங்டனில் பயிற்சியும் கொடுத்தாக குறிப்படார். தமிழ் ஈழத்தில் இன்றும் சிங்கள ராணுவம் கொடுமை செய்து வருவதாகவும், தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாகி வருவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். இத்தனைக்குப் பிறகும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்போம் என்று ராணுவ அமைச்சர் அந்தோணி பேசுகிறார் என்றால், மத்திய அரசு தமிழக மக்களை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மத்திய அரசின் துரோக முகம், மேலும் அம்பலமாகிவிட்டதாகவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top