Home
You Are Here: Home » News » 4 வது ஒரு நாள் போட்டியில்இந்தியா அபார வெற்றி

4 வது ஒரு நாள் போட்டியில்இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் இந்த முறையும் தனது பொறுப்புணர்ந்து ஆடி, 106 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த பெல் பத்து ரன்களில் ஆட்டமிழக்க‌, குக்குடன் இணைந்த பீட்டர்சன் 93 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொர்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சர்மா மற்றும் அஸ்வின் தலா இரண்டு வி்க்கெட்டுகளையும்‌, ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் ஆடத் துவங்கிய இந்திய அணியில், வழக்கம் போல் காம்பீர் பத்து ரன்களில் ஆட்டமிழக்க துவக்கத்திலேயே ஆட்டம் சிறிது மந்தமாக துவங்கியது. பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த வீராத் கோஹ்லியால் ஆட்டம் சூடு பிடித்தது.

தான் எதிர்க்கொண்ட பந்துகளை பவுண்டரிகளாக மாற்றிய கோஹ்லி டிரேட்வெல் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ரெய்னா மற்றும் ரோகித் சர்மா இங்கிலாந்து அணியினர் வீசிய பந்துகளை விளாசினார்கள்.

இதன் மூலம் 47 புள்ளி 3 ஓவர்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
89 ரன்கள் எடுத்து ரெய்னா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 83 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் ஆட்ட நாயகன் ஆனார்.

4வது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் 3 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியதோடு, ஒரு நாள் போட்டி தர வரிசையில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டது.

About The Author

Number of Entries : 5539

Comments (2)

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top