மிளகு பயிரை மலைவாழ் மக்கள்பயிரிட்டு சாதனை
கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை கிராமத்தில் குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய மிளகு பயிரை மலைவாழ் மக்கள் பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர்.

குளிர்பிரதேசமான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளில் விளையக்கூடிய நல்ல மிளகு பயிரை கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை கிராம மக்கள், பயிரிட்டுள்ளனர்.
இங்கு விளையக்கூடிய மிளகுபயிர் தரமாகவும், காரமாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
மிளகு பயிர் ஒருகிலோவுக்கு 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை கிடைப்பதால், மலைவாழ் மக்கள் மிளகு பயிர் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேல் நாட்டினர் மிளகாய் பொடிக்குப்பதில் நல்ல மிளகு பொடியையே பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.
