Home
You Are Here: Home » News » India » பாலியல் வழக்கில் மரண தண்டனை இல்லை – வர்மா கமிஷன் அறிக்கை

பாலியல் வழக்கில் மரண தண்டனை இல்லை – வர்மா கமிஷன் அறிக்கை

பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று வர்மா கமிஷன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஒடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.எஸ்.வர்மா தலைமையிலான 3 பேர் குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி லீலாசேத், கோபாலசுப்பிரமணியம் ஆகியோரும் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு ஒரு மாதமாக தயாரித்த தனது அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் நேற்று சமர்பித்தது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஜெ.எஸ்.வர்மா, நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக கூறினார். சர்வதேச அளிவில் கருத்துகள் கேட்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 80 ஆயிரம் ஆலோசனைகள் தமக்கு வந்ததாகவும் வர்மா தெரிவித்தார். காவல் நிலையங்களில் 25 சதவீதம் பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், சிறார்களுக்கான வயது உச்சவரம்மை 18 லிருந்து 16 குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளதாக வர்மா கூறினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக வர்மா தெரிவித்துள்ளார். பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்க கூடாது என்றபோதிலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க அரசியல் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதால் அதற்கு தாங்கள் பரிந்துரைக்க முடியாது என்றும் ஜே,சி வர்மா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பாலியல் பலாத்கார குற்றவாளிகள் போலீசாராக இருந்தாலும், அரசு அதிகாரிகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்திய குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 630 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையை வர்மா கமிஷன் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top