Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » ராமதாஸ்,காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவ படை கட்சி

ராமதாஸ்,காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும் – சமூக சமத்துவ படை கட்சி

தர்மபுரியில் கலவரத்தை தூண்டியதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் காடுவெட்டி குருவை கைது செய்ய வேண்டும் என சமூக சமத்துவ படை கட்சி வலியுறுத்தியுள்ளது.

தர்மபுரியில் சாதிக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சமூக சமத்துவப் படைக் கட்சித் தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி, நடைபயணம் தொடங்கியுள்ளார். தர்மபுரியில் கலவரத்தை தூண்டியதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு தற்போது வழங்கியுள்ள நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று கூறிய அவர்‌, கலவரத்தின் போது கொள்ளை போன பொருட்களை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என் கண்டனம் தெரிவித்துக் கொண்டார்.

About The Author

Number of Entries : 5564

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top