Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dharmapuri » பொங்கல் பரிசை புறக்கணித்த தர்மபுரிமக்கள்

பொங்கல் பரிசை புறக்கணித்த தர்மபுரிமக்கள்

கலப்பு திருமணத்தால் ஏற்பட்ட சாதிவெறித் தீயில் பாதிக்கப்பட்ட தர்மபுரி மாவட்ட கிராமக்கள், தமிழக அரசின் பொங்கல் பரிசை புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நாயக்கன்கொட்டாய்‌, ஒன்னியம்பட்டி, ஆண்டிவள்ளி, கிருஷ்ணபுரம்‌ புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தான் பரிசை புறக்கணித்தவர்கள் ஆவர்‍. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளதாக கிராமவாசிகள் கூறியுள்ளனர்‍. வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ஜாமின் மறுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொங்கலன்று அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக அனுசரிக்கப்போவதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர்‍.

பாதிப்பிற்குள்ளான நத்தம் காலனி, அண்ணாநகர்‌, கொண்டாம்பட்டி ஆகிய 3 கிராமங்களும் தமிழக அரசின் பரிசுகளை புறக்கணித்துள்ளனர்‍. வீடுகளை இழந்தும் நிவாரண உதவிகள் கிடைக்கப்பெறாமலும் உள்ள தங்களுக்கு பொங்கல் பரிசால் என்ன பயன் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்‍. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு இனத்தைச்சேர்ந்த பெண்ணை கலப்புத்திருமணம் செய்து கொண்டார்‍. இதனையடுத்து நிகழ்ந்த சாதிவன்முறையில் நாயக்கன்கொட்டை கிராமம் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top