Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore » வருகிற 18ந் தேதி என்.எல்.சி.அலுவலக முற்றுகைப் போராட்டம்

வருகிற 18ந் தேதி என்.எல்.சி.அலுவலக முற்றுகைப் போராட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, வருகிற 18ந் தேதி, என்.எல்.சி. சுரங்க நிர்வாக அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் பேரவை அறிவித்துள்ளது.

நெய்வேலியில் நடைபெற்ற பேரவை ஆலோசன்க் கூட்டத்திற்கு பின் பேசிய ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட செயலாளர் சேகர் இதனை தெரிவிததார். கடந்த ஜுன் மாதம், என்.எல்.சி.நிறுவனம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆணையத்துடன் செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தறபோது நிர்வாகம் வெளியிட்டுள்ள பணி மூப்பு பட்டியல், தொழிலாளர்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த மே மாதம் என்.எல்.சி ஊழியர்கள் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியது. 44 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, முதலில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இன்கோசர்வ் சொசைட்டி மூலம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஒப்பந்தம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஒப்பந்தப்படி நிர்வாகம் நடந்து கொள்ளாததால் தொழிலாளர்கள் சங்கத்தினர், முற்றுகைப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்னளா. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஜீவா தொழிற் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top