Home
You Are Here: Home » News » ஆர்.கே.நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிய அனுமதி பெறவேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள் காலை 3 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேரிக்க வேண்டும் என்றார். மேலும், எந்த பகுதிக்கு வாக்கு கேட்க செல்கிறோம் எத்தனை பேர் உடன் வருகிறார்கள், எத்தனை பேர் வெளியூர் ஆட்கள் என்ற விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும் என்றும் அவர் கூறினார்.

முறையாக அனுமதியில்லாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தால் தேர்தல் விதிமுறை மீறல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என்றும், வேறு ஏதேனும் பண பரிமாற்றம் நடைபெற்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற குற்றங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி அப்போது கூறினார்.

தேர்தல் பணிக்காக 4 பார்வையாளர்கள் சென்னை வந்துள்ளதாகவும், இன்னும் 5 பேர் ஒரிரு தினங்களில் வருகை தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top