Home
You Are Here: Home » News » ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பிரமாண பத்திரமாகவும், புகாராகவும் அளிக்கலாம் என தெரிவித்தது.

இதனையடுத்து, 10-க்கும் மேற்பட்டோர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் புகாரும் அளித்தனர். இதனையடுத்து அரசு மருத்துவர்கள் 2 பேர் நேரில் ஆஜராக கடந்த சில நாட்களுக்குமுன் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது மருத்துவர் சரவணன் என்பவர், ஜெயலலிதா இறந்த பிறகே அவரிடம் இருந்து கைரேகை பெறப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் அடுத்த கட்டமாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் தெரிவித்தார். மேலும், 60 பேரில் 27 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படாது என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையம் முன்பு இன்று நேரில் ஆஜராவி விளக்கம் அளித்தனர்

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top