Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

‘ஒக்கி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையின் கோரத் தாண்டவத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைப்போக்குவரத்து, தொலைத் தொடர்பு என அனைத்து அடிப்படை வசதிகளும் அடியோடு காலாவதியானதால் குமரி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது

புயலின் தாக்கம் குறைந்த நிலையிலும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் கணக்கீடு பணிகளில் ஈடுபடாததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top