Home
You Are Here: Home » News » 2ஜி வழக்கில் வரும் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது

2ஜி வழக்கில் வரும் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது

2ஜி வழக்கில் வரும் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது 

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக திமுகவின் ஆ.ராசா பதவி வகித்தபோது, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், கடந்த 2008-ல் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளைப் பின்பற்றாததால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தெரிவித்தது

இந்த விவகாரம்குறித்து சி.பி.ஐ. கடந்த 2009-ம் ஆண்டில் வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகிறது. புகாரைத் தொடர்ந்து கடந்த 2010-ல் மத்திய அமைச்சர் ஆ.ராசா பதவியிலிருந்து விலகினார். இந்த வழக்கை விசாரிப்பதற்காக சி.பி.ஐ. தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு, நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முடிவடைந்தது. பின்னர் பல்வேறு காரணங்களை காட்டி தீர்ப்பு தேதி அறிவிப்பதை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தொடர்ந்து ஒத்திவைத்தது. இந்நிலையில் வரும் 21ம் தேதி காலை 10.30 மணியளவில் 2 ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்துள்ளார். ஆர்கேநகர் இடைத்தேர்தல் நடைபெறும் நாளன்று தீர்ப்பு அறிவிக்கப்படுகிறது. இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top