Home
You Are Here: Home » News » Political » கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை டிடிவி தினகரன் ஆய்வு

கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை டிடிவி தினகரன் ஆய்வு

ஒக்கி புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை டிடிவி.தினகரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த தினகரன்‌, தமிழக அமைச்சர்கள் கட்டவுட் வைப்பதிலும் ஆடம்பர விழாக்கள் நடத்துவதிலுமே அக்கறை காட்டி வருகின்றனர் என்றார். 

குமரி மாவட்டத்தில் புயலால் மீனவர்கள் மாயமான விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எண்ணிக்கையில் இரு வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதாவும் குறிப்பிட்ட அவர்‌, பதவியை காப்பாற்றுவதிலேயே அமைச்சர்கள் குறியாக இருக்கின்றனர் என சாடினார்.

மக்களை காப்பாற்றுவதை விட்டு விட்டு அரசு பணத்தில் விழாக்களையும், கட் அவுட்களையும் வைப்பதற்கு கண்டனம் தெரிவித்த தினகரன்‌, குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கூட செல்ல வில்லை என புகார் தெரிவித்தார்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top