Home
You Are Here: Home » News » டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது : மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது : மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இம்மாதம் 21-ந்தேதி நடைபெறுகிறது. அதிமுகவுககு எதிராக களம் இறங்கிய டிடிவி தினகரன்‌, புதிய கொடிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில் தனக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை இந்த தேர்தலின்போதும் வழங்கவேண்டும் என்ற தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

இதையடுத்து தமக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தொப்பி சின்னம் கோரி சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் கோரிக்கை வைத்துள்ளதாக எடப்பாடி – பன்னீர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடத்திய நீதிபதிகள்‌, இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் தொப்பி சின்னம் வழங்குவது தொடர்பான தீர்ப்பை மாலை 4 மணிக்கு வழங்குவதாக அறிவித்தனர். இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்க உத்ரவிட முடியாது என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நிதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி தான் சின்னத்தை முடிவு செய்வார் என நீதிபதிகள் கூறியுளளனர். இதனால் டிடிவிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top