Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai » ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் : விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் : விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க தமிழக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்தது. கடந்த மாதம் விசாரணையை தொடங்கிய இந்த கமிஷன், ஜெயலலிதா மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பிரமாண பத்திரமாகவும், புகாராகவும் அளிக்கலாம் என தெரிவித்தது.

விசாரணை கமிஷன் அளித்த அவகாசத்திற்குள் 9க்கும் மேற்பட்டோர் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ததுடன், 30 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து அரசு மருத்துவர்கள் 2 பேர் நேரில் ஆஜராக கடந்த சில நாட்களுக்குமுன் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது மருத்துவர் சரவணன் என்பவர், ஜெயலலிதா இறந்த பிறகே அவரிடம் இருந்து கைரேகை பெறப்பட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் அடுத்த கட்டமாக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். சம்மன் அனுப்பப்பட்டுள்ள 60 பேரில் 27 பேர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சம்மன் அனுப்பப்பட்ட 60 பேர் யார் யார் என்ற விபரங்களை விசாரணை கமிஷன் வெளியிடவில்லை.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top