Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெறாததால் நாளை மற்றும் நாளை மறுநாள் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஒக்க புயலின் கோரத்தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நிலை குலைந்து போனது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதாலும், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகல்லூரிகளில் முறிந்து விழுந்த மரங்கள் இன்னும் அப்புறப்படுத்தபடவில்லை என கூறப்படுகிறது.

அரசு உரிய முறையில் மீட்பு பணி நடவடிக்கைளில் ஈடுபடவில்லை என பொதும மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணிகள் நிறைவடையாததால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தவிட்டுள்ளது.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top