Home
You Are Here: Home » News » Political » சட்டவிரோத வருவாய் குவிப்புப் புகார் கூறிய இணைய தளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு

சட்டவிரோத வருவாய் குவிப்புப் புகார் கூறிய இணைய தளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, சட்டவிரோத வருவாய் குவிப்புப் புகார் கூறிய இணைய தளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் டெம்பிள் எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் வருமானம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரே ஆண்டில் 80 கோடியே 50 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாக வயர் என்ற இணையதளத்தில் செய்திக் கட்டுரை வெளியானது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஆனால் அமித்ஷா பெயரைக் கெடுப்பதற்காக பொய்யான குற்றச்சாட்டு எழுப்பப்படுவதாக பா.ஜ.க. சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது நிறுவனம் தொடர்பான வரி மற்றும் வருமானக் கணக்குகள் முறைப்படி உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜெய்ஷா, வயர் நிறுவனத்திற்கு எதிராக 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top