Home
You Are Here: Home » News » இந்தியப் பொருளாதாரத்தையே பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சிதைத்துவிட்டார்கள்

இந்தியப் பொருளாதாரத்தையே பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சிதைத்துவிட்டார்கள்

இந்தியப் பொருளாதாரத்தையே பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சிதைத்துவிட்டார்கள்என முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர்‌, இந்தியாவின் சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர். ஆங்கில நாளிதழில் இன்று அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பிரதமரும் நிதியமைச்சரும் எப்படியெல்லாம் இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்துள்ளனர் என்று விரிவாகவே எழுதியுள்ளார்.

இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டிய சின்ஹா, அந்தப் பொய்யைக் காப்பாற்ற ஓவர் டைம் வேலை பார்க்கிறார் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லி என விமர்சித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை ஜெட்லி தவறவிட்டதன் விளைவு தற்போது பொருளாதாரம் சிதைந்து விட்டது என குற்றம்சாட்டியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்த போது. அதை சரியாகப் பயன்படுத்தாமல் லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணடித்துவிட்டார்.

இந்திய பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது என்றும் அதற்கு பணமதிப்பிழப்பு ஒரு முக்கிய காரணம் என சாடியுள்ள சினஹா, ஜிஎஸ்டி வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக என குற்றம்சுமத்தியுள்ளார்.

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top