Home
You Are Here: Home » News » பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு தடை விதித்து இருந்தனர். அந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி தீவிரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடிய மலாலா- வை துப்பாக்கியார் சுட்டனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் பிழைத்த மலாலா பின்னர் இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்றார். தற்போது வெளிநாட்டிலேயே வசித்து வரும் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இதற்கிடையே மலாலா மீது நடந்த தாக்குதல் நடத்தியது குர்ஷீத் என்ற தீவிரவாதி எனத் தெரியவந்தது.

இந்த நிலையில் குவெட்டா நகர் அருகே உள்ள சதாப் பகுதியில் போலீசாருக்கும், தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இதில் 4 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில் குர்ஷீத்தும் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top