Home
You Are Here: Home » News » விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழப்பு 

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சாராய வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. சாராய வியாபாரியான இவர் தலைமறைவான நிலையில், போலீசார் 2 மாதங்களாக இவரை தேடிவந்தனர். இந்நிலையில் ஏழுமலையின் குழந்தைகளுக்கு காதனி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏழுமலையை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. ஆரணி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஏழுமலையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதோடு, ஆரணி-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது

About The Author

Number of Entries : 5562

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top