Home
You Are Here: Home » News » India » நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலனை 

 

 

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இழுத்து மூடுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ், தமிழகத்தில் 45 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 434 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில், வாகனங்களின் வகைக்கு ஏற்ப, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத‌னால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2014 மக்களவை தேர்தலின் போது, ‘பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்படும்’ என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. பா.ஜ., அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளாகியும், சுங்கச்சாவடிகள் இன்னும் மூடப்படவில்லை. இந்நிலையில், புதிய வாகனங்களை பதிவு செய்யும் போதே, சாலை வரி உள்ளிட்டவை கட்டணமாக வசூலிக்கப்படுவதால், அதன் பின்னும், சுங்கக் கட்டணம் செலுத்துவது தேவையற்றது என்ற கருத்து, வாகன உரிமையாளர்களிடம் உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top