Home
You Are Here: Home » News » தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்த  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

 

 

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சித் தேர்தலை, இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின்போது, மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொகுதிவரையறை, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற தங்களுக்கு கால அவகாசம் தேவை என்றும், ஜூலைக்குள் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஜூலைக்குள்ளும் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆனையத்துக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. வரும் 18ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், வேட்பாளர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top