Home
You Are Here: Home » News » இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மீனவர்கள் 80பேரை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்

 

 

 

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து தமிழக மீனவர்கள் அடிக்கடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதோடு, இலங்கை சிறையில் இருந்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்‍.

இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்டு 31ஆம் தேதி நல்லலெண்ண அடிப்படையில் 80 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. அதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 80 மீனவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. பின்னர் மீனவர்கள் அனைவரும், காரைக்கால் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top