Home
You Are Here: Home » News » ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் தட்டிச்சென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் தட்டிச்சென்றுள்ளார்.

icc_logo

 

சர் கர்பீல்ட் சோபர்ஸ் டிராபி என கூறப்படும், இந்த விருதுகள் 2004ம் வருடம் முதல் அளிக்கப்பட தொடங்கியுள்ளன. 2015ம் ஆண்டுக்கான சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி, இவ்வாண்டு செப்டம்பர் 13ம் தேதிவரை நடைபெற்றது. இதன் அடிப்படையில் ஸ்டீவ் ஸ்மித் விருதை தட்டிச்சென்றுள்ளார்.

 

தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ்,  சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை  தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார்.

 

ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 

இங்கிலாந்தின் ஜோஸ் ஹேசில்வுட்டுக்கு சிறந்த இளம் வீரருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.

 

மகளிரை பொறுத்தவரை, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேன்னிங்  சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர்,  சிறந்த டி 20 வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

2004 ஆம் ஆண்டு  ராகுல் டிராவிட்டுக்கும், 2010 ஆம் ஆண்டு   சச்சின் டெண்டுல்கருக்கு இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top