Home
You Are Here: Home » News » திருச்சியில் கட்டுமான பணியின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் உட்பட 4 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் கட்டுமான பணியின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் உட்பட 4 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் உத்தரவீதி பகுதியில்  பழைய வீடு ஒன்றை  இடித்துவிட்டு, புதிதாக 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் மணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  நேற்று  பணியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து வீட்டின் சுவர் சரிந்து, வீட்டின் மீது விழுந்ததில், மேற்கூரை இடிந்து, தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  படுகாயம் அடைந்த 5  பேர் திருச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்  இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

About The Author

Number of Entries : 5539

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top