Home
You Are Here: Home » News » India » கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

srilankan

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு ‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  10-க்கும் மேற்பட்ட படகுகளை சேதப்படுத்தியதோடு , மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். மேலும் மீனவர்கள்  பிடித்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறித்து சென்றதாக கரைக்கு திரும்பிய மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top