Home
You Are Here: Home » News » தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முயல அவர்களில் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 படகுகுளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 24 பேரும் சிறைபிடிக்கப்பட்டதுடன் அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராமேசுவரம் மீனவர்கள், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த உறுதியை ஏற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கையின் காட்டு தர்பார் தொடர்வதால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top