Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul » சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ

சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ

திண்டுக்கல் பழனி சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர்தப்பினர்.

திருப்பூரில் வசித்துவரும் பாண்டியன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுகொண்டிருந்தார். கார் பழனி சாலையில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, திடீரென தீப்பிடித்துக்கொண்டது. உடனடியாக காரில் இருந்த அவரது மனைவி பத்மாவதி மற்றும் குழந்தைகளும் காரைவிட்டு கீழே இறங்கி உயிர்தப்பினர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இந்த சம்பவம் பற்றி ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top