Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore » கோவையில் பல்லி இருந்த முட்டை பப்ஸ் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்

கோவையில் பல்லி இருந்த முட்டை பப்ஸ் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம்

கோவையில் பல்லி இருந்த முட்டை பப்ஸ்சை சாப்பிட்ட நான்கு பேர் வாந்தி மயக்கத்திற்கு ஆளாகினர்.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பர்களான கணேஷ், மகேஸ், ஜேம்ஸ் ஆகியோருடன் டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர்கள் 4 பேரும் முட்டை பப்ஸ் சாப்பிட்டுள்ளனர். இதில் ஜேம்ஸ் என்பவர் திடீரென வாந்தி மயக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

அப்போது ஜேம்ஸ் சாப்பிட்ட பப்ஸ்சில், கருகிய நிலையில் பல்லி கிடந்தது பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் அருகில் இருந்த மற்ற இருவர் வாந்தி மயக்கம் அடைந்தனர்.

இதனையடுத்து, அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே கடை உரிமையாளர் வாசுதேவன் தொழில் போட்டி காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற்றி உள்ளதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top