Home
You Are Here: Home » News » India » சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவ பிரசன்னம்

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தேவ பிரசன்னம்

பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பின் இன்று தேவ பிரசன்னம் நடைபெற உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்து அம்மன் கோயிலை சீரமைக்க பல வருடங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. மேலும் நெரிசலை குறைப்பதற்காக கோயில் வளாகத்தில் ஒரு பாலம் அமைக்கவும், பசுமக்குளத்தின் இடத்தை மாற்றவும், பிரதட்சண வழி அமைப்பதற்கும் திட்டம் உள்ளது. இவை அனைத்துக்கும் தேவபிரசன்னம் நடத்தி அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். இதில், சாதகமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே கோயிலில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன்படி 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல ஜோதிடர் கோழிக்கோடு செறுவள்ளி நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் இன்று காலை தேவபிரசன்னம் தொடங்கியது. நாளை மாலை வரை நடைபெறும் இந்த பூஜையில் பிரசித்தி பெற்ற பல தந்திரிகள், வேத பண்டிதர்கள் கலந்து கொள்கின்றனர்.

About The Author

Number of Entries : 5569

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top