Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » புகார் அளிக்கச் சென்ற குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு – பொது‌மக்கள் கண்டனம்

புகார் அளிக்கச் சென்ற குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது பொய் வழக்கு பதிவு – பொது‌மக்கள் கண்டனம்

இளம்பெண் கேலி செய்யப்பட்டது‌குறித்து‌நாகர்கோயில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற, குமரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டவர்களை, போலீசார் கைது‌ செய்து‌ பொய் வழக்கு பதிவு செய்துள்ளதற்கு பொது‌மக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து‌ள்ளனர்.

கன்னியாகுமரி தேமுதிக மாவட்ட பொருளாளரான கவாஸ்கரின் உறவினர் பெண்ணை, சமூகவிரோதிகள் சிலர் கேலிகிண்டல் செய்ததாக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகர்கோவில் காவல்நிலையத்தில் கவாஸ்கர் மற்றும் கழக மாவட்ட செயலாளர் ஜெகந்நாதன் ஆகியோர் புகார் அளிக்கச் சென்றுள்ளனர்‍. ஆனால் அந்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் புகார் அளிக்கச் சென்றவர்களை கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்‍. இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பொய் வக்கில் கைது செய்த தேமுதிகவினரை அதிகாலை 5 மணிக்கு அவசர அவசரமாக நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்‍. அப்போது காவல்துறையினரை நீதிபதி கடிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பொய்ப்புகாரில் தேமுதிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகர்கோவில் மாவட்ட சிறை முன்பு , மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் ஏராளமான தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆளுங்கட்சியினரின் ஏவல்துறையாக மாறிவி்ட்ட காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர்‌, புகாரளிக்கச் சென்ற தேமுதிகவினரை மட்டும் நீதிபதியிடம் அவசர அவசரமாக ஆஜர்படுத்த முனைந்தது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top