Home
You Are Here: Home » News » புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பல் கைது

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பல் கைது

புதுச்சேரியில் மாணவனை கடத்திய கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை, பணம் பெறும் போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகனகிருஷ்ணன். மரக்காணம் அரசு பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதேபகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் இவரது மகன், ஹரிஷ் சந்திரனை மர்மநபர்கள் கடத்தி சென்றனர். 30 லட்சம் ரூபாய் பணம் அளித்தால் மட்டுமே சிறுவனை உயிரோடு விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக மோகன கிருஷ்ணன் அளித்த புகாரை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு அஞ்சி புதுச்சேரி முருகா திரையரங்கம் அருகே சிறுவனை இறக்கி விட்டு மர்மகும்பல் தப்பியோடியது.

இத்னை அடுத்து, சிறுவனை போலீசார் மீட்டனர். இதனிடையே, கடத்தல் கும்பல் கிளியனூர் அருகே தாங்கள் கேட்ட பணத்தை பெறுவதற்காக வந்திருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவன் மட்டும் தப்பியோடிவிட்டான். அவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

About The Author

Number of Entries : 5552

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top