Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari » பொது‌மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்

பொது‌மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பொது‌மக்களுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மலையடி பகுதியில் இன்று‌ புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது‌.

அப்பகுதியில் பள்ளி, கோவில், சர்ச் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பதால் பொது‌மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பொது‌மக்களின் எதிர்ப்பை மீறி, நேற்றிரவு டாஸ்மாக் கடைக்கு தேவையான ஏராளமான மது‌பாட்டிகள் லாரியில் இருந்து‌ கடைக்கு இறக்கப்பட்டன.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று‌திரண்டு டாஸ்மாக் கடையை அடித்து‌ நொறு‌க்கினர். இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது‌பாட்டிகள் உடைந்து‌ சேதமானது‌.
அப்போது‌ அங்கு வந்த போலீசார், பொது‌மக்கள் மீது‌ தடியடி நடத்தினர்.

இதனை கண்டித்து‌ பொது‌மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டபோது‌ ‌ இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது‌. இதில் பொது‌மக்கள் 5 பேரும், போலீசார் 2 பேரும் காயமடைந்தனர்.

அப்போது‌ போலீஸ் வாகனம் உட்பட இரண்டு வாகனங்கள் அடித்து‌ நொறு‌க்கப்பட்டது‌.
இதையடுத்து‌,மாவட்ட காவல்து‌றை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நூற்று‌க்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டடு அஙகு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது‌.

About The Author

Number of Entries : 5546

Leave a Comment

© Captain Media Pvt Ltd

Scroll to top